• Thu. Sep 28th, 2023

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து.., உரிய நேரத்தில் ஏர்பேக் வெளிவந்து ஓட்டுநர் உயிரை காப்பாற்றியது…

ByKalamegam Viswanathan

Sep 19, 2023

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 29) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையில் இருந்த தடுப்புச் சுவற்றில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து விபத்தின் போது காரில் இருந்த ஏர் பேக் உரிய நேரத்தில் வெளிவந்து காரை ஓட்டி வந்த சத்யாவை காப்பற்றியது. இதனால் சத்யா லேசான காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து விபத்து சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்து கொண்டிருந்தது. சாமர்த்தியமாக செயல்பட்டு தடுப்பு சுவற்றில் மோதி வாகனம் நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *