• Wed. Mar 26th, 2025

மதுரையில் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து, கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Mar 6, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம், அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் ஒன்றிணைத்து 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இன்று ஒரு நாள்‌ வேலை நிறுத்தம் செய்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கட்டுமான துறையின் கனிமப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், தற்போது நடைபெற்று வரும் வேலைகளை முடிக்க சந்தை விலைக்கு ஏற்றவாறு பட்டியலை அரசு உயர்த்தி தரவேண்டும், சிமெண்ட், கம்பி போன்ற பொருட்கள் விலை ஏறும்போதும் இறங்கும்போதும் விலை விகிதாச்சாரத்துடன் விலைப்பட்டியல் வழங்கப்படுவது போல கருங்கல் ஜல்லி எம்.சாண்ட் உள்ளிட்டவைகளின் விலையை மாற்றி தருவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை‌ சந்தித்த மதுரை சிவில் இன்ஜினீயர் அசோசியேசன் தலைவர் சஞ்சய் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது,

கருங்கல், ஜல்லி, எம் சாண்ட் ,கிணற்றுமண் போன்ற கனிம பொருட்களின் விலை 50% வரை உயர்ந்துள்ளதாகவும் இதனால் பொது மக்களும் தொடர்ந்து கட்டிட பணிகள் செயல்படுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த பிரச்சனையை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.