மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை எதிரே அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழா முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் அன்னதானத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்., அப்போது தொடர்ந்து திட்டமிட்டு ஊடக மேலாண்மை என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிற வகையில் தலைமை கழகத்தில் விருப்ப மனு அளிப்பதற்கு வெரிச்சோடிய தலைமை செயலகம் என்ற அறிக்கையை வெளியிட்டார்கள், இன்று முக்கிய நாளிதழில் மதுரை தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தலைமை தேடுகிறது என எழுதியுள்ளனர்.
இந்த எழுச்சி மிகு இயக்கத்தில் விருப்ப மனு அளிக்க தலைமை கழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்., இது வரை 3500 பேர் விருப்ப மனு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது., இன்றைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற இரண்டு கட்சிகளை எதிர்த்து நெஞ்சுறுதியோடு களத்தில் நின்று மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அம்மா வழியில் மெகா கூட்டணியை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்.
மிக விரைவில் கூட்டணி தோழர்களோடு அறிவிக்கின்ற வேட்பாளர்களை பார்த்து இந்திய திருநாடே திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது., அவர்களின் குரல் தான் தமிழர்களின் குரலாய், தமிழ் இனத்தின் குரலாய், தமிழகத்தை மீட்டெடுக்கம் குரலாய் நாடாளுமன்றத்தில் எடுத்து வைப்பார்கள் என்பதை இந்த உசிலம்பட்டி மண்ணிலிருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.
செயல்படாது முடங்கி போய் இருக்கிற எந்த பிரச்சனைக்குமே வாய் திறக்காத மௌன சாமியாராக நமது முதலமைச்சர் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது., இந்த போதைப் பொருள் கடத்தல் என்பது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதற்கு மருந்தாக முதலமைச்சர் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும், ஆனால் அவர் வாய் திறக்காதது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவும், வேலியே பயிரை மேய்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, இதையெல்லாம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்து வந்தோம், விரைவில் ஆரம்பிக்கப்படவில்லை என்று சொன்னால் அதிமுக பொதுச் செயலாளர் ஆணையை பெற்று போராட்ட களத்தில் இறங்குவதற்கும் தயங்காது என 10 தினங்களுக்கு முன்பு தான் அறிவித்தோம், அதனுடைய பலனாக கூட இது கிடைத்திருக்கிறது மக்களின் முழு பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பது தான் அதிமுகவின் எதிர்பார்ப்பு.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியுள்ளதாக எழும் புகார்கள் குறித்த கேள்விக்கு., தமிழ்நாட்டிற்கு மட்டும் மத்திய அரசு ஜய்க்கா நிறுவனம் மூலம் லோன் பெற்றுக் கொள்ள சொல்லியுள்ளன, மற்ற மாநிலங்களில் அரசின் நிதி கொடுக்கப்பட்டது, இதற்கு மட்டும் 90% ஜய்க்கா நிறுவனம் வழங்குகிறது, இப்போது நிதி பெறப்பட்டு எல் & டி நிறுவனம் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது, 10% தான் மத்திய அரசு கொடுக்கிறது, மற்ற மாநிலங்களில் முழு தொகையையும் கொடுத்தது., நிதி கிடைக்க தாமதம் தான் காரணம்.
223 ஏக்கர் நிலத்தை அப்போதைய அதிமுக அரசு ஏற்கனவே எடுத்து கொடுத்தது, இதே போன்று குலசேகரபட்டினம், மருத்துவ கல்லூரிகளுக்கு என நிலங்களை மின்னல் வேகத்தில் எடுத்து கொடுத்தோம்., மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிலங்களை எடுத்து கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அதனால் தான் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையும் என பேசினார்.