• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வழியில் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Feb 19, 2024

மதுரை மாவட்டம், வைகை வடகரை ஆழ்வார்புரம் பகுதியில் SSLC & +2 வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்/மாணவிகளுக்கு ஊக்குவிப்பும் , நோட் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.


மேலும் இந்நிகழ்வில், ஆ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர்.காட்வின்வேதநாயகம் ராஜ்குமார், தேவிப்பட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர்
உலகராஜ், பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் திவ்யா,
முதுநிலை வருவாய் ஆய்வாளர் P.மணிமாறன், சமூக ஆர்வலர் மக்கள் தொண்டன் க.அசோக்குமார், R.வசந்தகுமார், செல்வி.S.ஆனந்தி, செல்வி.P.வைரமணி, M.பாலா மற்றும் மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்.


விழாவினை டாக்டர் APJ. அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஆ.செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.