• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

ByKalamegam Viswanathan

Jul 20, 2023

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் புளியமரத்துக் கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டி
ஒத்தக்கடையைச் சேர்ந்த தேவநாதன் (24), என்பவரின் உதவியுடன்,
கடந்த 29.07.2019-ம் தேதி ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக கடத்திச்
சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக சாணார்பட்டி காவல்
நிலையத்தில் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற
காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கானது, திண்டுக்கல் மகளிர் விரைவு
நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று (19.07.23) மேற்படி
முதல் எதிரி பிரகாஷ் என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும்
ரூ. 7,000/- அபராதமும், இரண்டாம் எதிரி தேவநாதன் என்பவருக்கு 5 ஆண்டுகள்
சிறைத்தண்டனையும் மற்றும் ரூ. 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.