• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

TNPSC தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு!

TNPSC-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என டி.என்பி.எஸ்.சி வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுப்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து, எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெயியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி அல்லது [email protected] /[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.