✦ உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும்.
✦ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும்.
✦ நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்.
✦ பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
✦ குண்டு வத்தல் அப்பளம் பரமத்தி வெற்றிலைக்கு பூவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை
✦ சென்னை செங்கல்பட்டு இடையே இருக்கும் மின்சார ரயில் சேவை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்
✦ ஏழை எளிய குடும்பத்தில் உள்ள மகளிருக்கு மாதம் ரூபாய் 3000 உரிமைத்தொகை வழங்க வேண்டும்
✦ சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்
✦ 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்
✦ தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும்
✦ வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்
✦ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற நடவடிக்கை
✦ இரு சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை
✦ மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்
என்பன உள்ளிட்ட 133 தேர்தல் சிறப்பம்சங்களைக் கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு