திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூரில் உள்ள சின்னாளபட்டி பேரூராட்சியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தலைவர் பதவி கொடுக்கப்பட்டு வருவதாகவும், பிற சமூகத்தினர் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும் திமுகவினரே புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியது மேலும் அதன் கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெற்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் மாநகராட்சி கொடைக்கானல் பழனி ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் பேரூராட்சி திமுக கூட்டணி கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இதேபோல தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சொந்த தொகுதியாக கருதப்படும் ஆத்தூர் பகுதியில் உள்ளது சின்னாளப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சி. சுங்கடி சேலை க்கு உலகப் புகழ்பெற்ற சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி யாக அறிவிக்கப்பட்ட பின் அதில் 18 வார்டு உறுப்பினர் பதவி உள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலில் 17 இடங்களில் திமுக வேட்பாளர்களும் ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர் இந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை தோற்கடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனை படைத்தவர் ஐ பெரியசாமி அந்த அளவுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் செல்வாக்கு இருந்தது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திமுகவினர் பெரும்பான்மையான பலத்துடன் இருந்த போதிலும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிப்பதாக திமுகவினரை கூறி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சின்னாளபட்டி சிறிய பகுதியாக இருந்த போது அங்கிருந்த பெரும்பான்மை சமூகத்தினர் ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளை வகித்து வந்தனர். தற்போது சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு சின்னாளபட்டி விரிவடைந்து விட்ட போதிலும் இன்றளவும் குறிப்பிட்ட ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பேரூராட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கட்சியின் நீண்டகாலமாக உழைப்பவர்கள் அமைச்சரின் தீவிர விசுவாசிகளுக்கு வாய்ப்பில்லையா என அக்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சின்னாளபட்டி அனைத்து சமுதாயத்தினரும் உள்ள பேரூராட்சி, ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதால் மற்ற சமுதாயங்களையும் மற்றும் கழக உடன் பிறப்புகளையும் ஒதுக்கி வைப்பதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர். கட்சியின் அனைத்து போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் தேர்தல் என அனைத்திலும் பணிசெய்த தொண்டர்களுக்கு தலைவர் பதவி தரக்கூடாதா எனப் பேரூராட்சி முழுவதும் தொண்டர்களின் மனக்குமுறலுடன் பேசுவதாகவும், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப உடனடியாக தேவைகளை செய்யும் கூட்டுறவுத்துறை அமைச்சர் சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஜாதி மதம் பார்க்காமல் தொண்டர்களுக்கு ஒதுக்குவார் என எதிர்பார்ப்பதாக திண்டுக்கல் முழுவதும் வாட்ஸாப் குழுக்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
