தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்வப்பாண்டியன் சென்னை கொரட்டூர் பஸ் நிலையம் அருகே நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லப்பாண்டியன் ஒரு விளம்பர பிரியர் ஏற்கனவே மது குடிப்போருக்கு இன்சுரன்ஸ் , பாரடைஸ் சிட்டி ,சங்கத்து உறுப்பினர்கள் கண்டிப்பாக டவுசர் மாடல் உள்ளாடை தான் அணிய வேண்டும் என்று வேடிக்கையாக கொள்கைகளை கொண்ட மனிதர்.
தற்போது செல்லப்பாண்டியன் சென்னை கொரட்டூருக்கு உட்பட்ட வார்டில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், தன் மீது கொசு வலையை போத்திக்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், தான் வென்று வந்தால், மக்களுக்கு கொசுவலை, கொசுபேட், கொசுவர்த்தி ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கு வழங்குவதுடன், கால்வாய், சாலை ஓரம் நிற்கும் நீரில் கொசு உற்பத்தி ஏற்படாமல் தடுத்திட அயராது பாடுபடுவேன் என்றும் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்