• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நான் திமிர் பிடிச்சவதான் – வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து, தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக கூறி சமீபத்தில் வெளியேறினார் நடிகை வனிதா.

நடிகை வனிதா விஜய்குமார் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் என விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினார். பின்னர், தனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் தனது மகளுடன் தான் இருக்கும் புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். தன்னை திமிர் பிடித்தவள், அகங்காரம் கொண்டவள் என்னை சிலர் நினைப்பதாகவும் தான் அப்படித்தான் என்றும் அவர் கூறியுள்ளார். தான் அதற்கு தகுதியானவள் என்றும் அதை ஏற்பதும் ஏற்காததும் மற்றவர்கள் பிரச்சினை என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு தான் தான் முக்கியம் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தான் மற்றவர்கள் விமர்சனங்கள் குறித்து கவலை கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.