• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மோடி வருகை தருவதன் காரணமாக திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது அதிகாரிகள் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Feb 26, 2026

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தருகிறார்.

மதுரை வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பாரத பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அவரது சிறப்பு பாதுகாப்பு படையினர் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மதுரை விமான நிலையம், விமான நிலையம் அருகே அரசு நிகழ்ச்சி நடைபெறும் பகுதி

அதனைத் தொடர்ந்து , பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

பிரதமர் வந்து செல்லும் பகுதியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பகுதிகளில் பாதுகாப்பு அளிப்பது, எந்த வழித்தடத்தில் செல்வது சிசிடிவி கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.