சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் மற்றும் நகர் பேரூராட்சி பகுதிக்கும் கொ.இடையவலசை கிராம ஊராட்சி பகுதிக்கும் இடைப்பட்ட பாரதியார் நகரில் நீண்டகாலமாக பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இந்த பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், அகற்றப்படாமல் இருந்த 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்களின் அறிவுறைப்படி பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அகற்றப்பட்டது.
மேலும் இதே சாலையில் 500 மிட்டர் அளவிற்கு கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து துர்நாற்றம் வீசுவதால் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கால்வாய் சரிசெய்யப்பட்டது.