நற்றிணைப்பாடல் : 101
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி இனிதுமன்; அளிதோ தானே- துனி தீர்ந்து, அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின், மீன் எறி பரதவர் மட மகள் மான் அமர் நோக்கம் காணா ஊங்கே. பாடியவர்: வெள்ளியந்தின்னனார் திணை : நெய்தல் பொருளுரை:
வருத்தமின்றி, அகன்ற அல்குலையும் மெல்லிதாயமைந்த இடையையுமுடைய மீன் பிடிக்கின்ற பரதவர்தம் இள மகளின் மான்போலும் ஒன்றோடொன்று மாறுபட்ட பார்வையைக் காணப்பெறாதமுன் உவ்விடத்தே: முற்றா மஞ்சள் பசும் புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின்முற்றாத இளமஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போலச் சுற்றியிருக்கின்ற சருச்சரையையுடைய சூழ்ந்த கழியிடத்துள்ள இறாமீனின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிகூட்டங் கொண்ட குவியல் காயும் வகையை ஆராய்ந்து; புன்னையினது அழகிய கொழுவிய நிழலின் எதிரே போகட்டுப் பரப்புந் துறைக்கு அணித்தாயிருந்த பாக்கமும; முறையே மிக இனிமையுடையதாயிருந்தது; அஃது இற்றைநாளால் அப்பரதவர் மகளின் நோக்கங் காணப்பெற்றமையாலே கழிந்து போகியதாகலின்; இரங்கத் தக்கதாயிராநின்றது;








