• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எனக்கு முதுகெலும்பில்லை எனக் கூறும் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றால் நேரில் வந்து எனது முதுகெலும்பின் பலத்தை பரிசித்து பார்க்க தயாரா..? எடப்பாடி பழனிச்சாமி சவால்…

ByG.Ranjan

Mar 28, 2024

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

விஜய பிரபாகர் படித்தவர் நல்லவர் வல்லவர், திறமையானவர். நல்ல மகனை வளர்த்து விஜயகாந்த மக்களுக்காக கொடுத்துள்ளார். அதிமுகவை யார் யாரோல்லாம் அழிக்க முற்பட்டார்களோ அவர்கள் அடையாளம் தெரியாமல் போய் விட்டார்கள். நம் வேட்பாளரை விட கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கூட்டணி காட்சிகளை நேசிக்கும் கட்சி அதிமுக.

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை கண்ணீர் வர வைக்கிறார்கள். அதிமுகவில் கூட்டணி வைப்பவர்களை கைதூக்கி விடிவது அதிமுகவின் பண்பு. எங்கு பார்த்தாலும் மு.க.ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் என்னைப்பற்றியே பேசி வருகிறார்கள். எங்களை நினைத்து இருவருக்கும் தூக்கம் போய்விட்டது.

தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. பட்டாசு தொழிலை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வாதாடியது. எதிர்காலத்தில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பட்டாசு தடைகளை உடைத்துஎரிந்து ஏற்கனவே எவ்வாறு சிறப்பாக பட்டாசு தொழில் நடந்ததோ அதேபோன்று நடைபெற வழிவகை செய்வார்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் 38 பேர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பட்டாசு தொழிலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அழுத்தம் கொடுத்து இருக்கலாம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். திமுக ஆட்சி இருக்கும் வரை மக்கள் நலமாக இருக்க முடியாது.

கவர்னரை எதிர்த்து பேசவில்லை என நேற்று மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு புகாரை ஆளுநரிடம் அளித்த போது ஆளுநர் திமுகவினருக்கு நல்லவராக தெரிந்துள்ளார், திமுகவினரின் தவறை ஆளுநர் சுட்டிக்காட்டும் போது ஆளுநர் கெட்டவராகி விடுகிறார்.

திமுகவினர் செய்த போதைப்பொருள், சட்டவிரோத மதுபான பார் குறித்த ஆதாரத்தோடு அளித்த முறைகேட்டு புகார் குறித்து ஆளுநர் முறையாக விசாரிக்கவில்லை.

புகார் மீது ஆளுநர் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகத்திற்கு தற்போது நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்திருக்கும்.ஆளுநர் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். கஷ்டம் துன்பங்களை உணர்ந்து விலை குறைப்பு செய்ய வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகம் மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அடியோடு சரிந்துவிட்டது. தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருப்பது கேவலமாக உள்ளது. இளம் தலைமுறையினர் போதை பொருளுக்கு அடிமையாகி வருவது வேதனையளிக்கிறது.

போதை பொருளை கடத்த திமுக அயலக அணியை உருவாக்கியுள்ளது. முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவருடன் ஜாபர் சாதிக் எடுத்து கொண்ட புகைப்படத்தை காட்டி விமர்சனம். திமுக அரசு செயலற்ற பொம்மை அரசாக உள்ளது. எழுதி வைத்துள்ளதை வெளிநாடுகளில் சென்று பேசி வருகிறார்.

எனக்கு முதுகெலும்பு இல்லை என கூறும் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, எனக்கு முதுகெலும்பு பலமாக உள்ளது. வேண்டுமென்றால் நேரில் வந்து எனது முதுகெலும்பின் பலத்தை பரிசித்து பாருங்கள் என சவால். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுக அரசு எதிர்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான வழக்கு போட்டு வருகிறார்கள். அதிமுக எதையும் சந்திக்க தயாராக உள்ளது. எதிர்க்கட்சியை பழிவாங்க மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுக்கவில்லை.

நான் நினைத்திருந்தால் 4 ஆண்டுகளில் திமுகவினர் மீது வழக்கு தொடுத்திருக்கலாம் நாங்கள் மக்கள் பணியை மட்டுமே செய்தோம். என்மீது பொதுப்பணித்துறையில் ஊழல் நடந்ததாக பொய்யாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்னைப் பார்த்து முதுகெலும்பு அல்லாதவர் என கேட்பதா?

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதில் நடந்த ஊழலை மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும். தற்போது திமுகவின் பல அமைச்சர்கள் நீதிமன்ற படிகளை ஏறி இறங்கி வருகிறார்கள். எப்பொழுது திமுக ஆட்சி முடியும் என திமுகவினரே எதிர்பார்க்கிறார்கள். அலங்கோல ஆட்சியாக, மக்கள் விரோத ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.