விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 11 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு அலங்காரம் நடந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




