• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் – நிதிஷ்குமார்

ByA.Tamilselvan

Dec 11, 2022

எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும் என நிதிஷ்குமார் பேச்சு.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் முதல் மந்திரியும், அக்கட்சி தலைவருமான நிதிஷ்குமார் பங்கேற்றார். அவர் பேசும் போது..: 2020-ல் நடந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்ய அவர்கள் (பா.ஜ.க.) முயற்சி செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். பீகார் அவர்களிடம் (மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து) எதுவும் பெறவில்லை. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. அவர் (பிரதமர் மோடி) பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்து வளமாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைகளை முன்னேற்றாமல் நாடு முன்னேற முடியாது. அவர்களை (பா.ஜ.க.) எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும். ஆனால் ஒருங்கிணைவது அனைத்துக் கட்சிகளின் கையில் உள்ளது. அதை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன் என தெரிவித்தார்