• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி வளர்ச்சிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!

Byவிஷா

Mar 10, 2023

முன்னாள் மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்காக பல்வேறு தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் நன்கொடை வழங்கியிருந்தனர். நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்வரிடம் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் வழங்கினார். இந்தநிலையில் இத்திட்டத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் மார்ச் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.