• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐ.ஏ.எஸ் அதிகாரி அனீஷ்சேகர் ராஜினாமா

Byவிஷா

Mar 2, 2024

ஐஏஎஸ் அதிகாரியும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021 முதல் 2023 வரை பணியாற்றியவர் அனீஷ் சேகர். கடந்த மே மாதம் அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த அனீஷ் சேகர், தற்போது தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றியபோது சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு மிதிவண்டியில் சென்று மக்களின் கவனத்தைப் பெற்றார் என்;பது குறிப்பிடத்தக்கது.