• Tue. Dec 10th, 2024

தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன்- அண்ணாமலை டுவிட்டர் பதிவு

ByA.Tamilselvan

May 4, 2022

நானே நேரில் சென்று தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன் என அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனமடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரிய நிகழ்ச்சி.இந்த நிகழ்வின் போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது வழக்கம்.மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதனை கருத்தில் கொண்டு தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதீனத்திடம் கோரிக்கை வைப்போம்.
தமிழக பா.ஜ.க. இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.