• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளேன் – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி

ByP.Thangapandi

Mar 12, 2024

தேனி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளேன் எனவும் – இரட்டை இலை சின்னம் முடங்காது, ஓபிஎஸ் கை-க்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்., வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மாபெரும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதாகவும், தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும், மனு மீதான நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் தேனி தொகுதியில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் எனவும், அனைத்து வழக்குகளிலும் ஓபிஎஸ் வெற்றி பெறுவார் எனவும், இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் கை-க்கு தான் கிடைக்கும்., கடந்த முறைகளை போல இரட்டை இலை சின்னம் முடங்காது ஓபிஎஸ் கை-க்கு தான் வரும் இரட்டை இலை சின்னத்தின் மூலம் 39 தொகுதியிலும் போட்டியிடுவோம் என பேசினார்.