• Mon. Jan 20th, 2025

உசிலம்பட்டி அருகே தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் – போலீசார் கைது

ByP.Thangapandi

Mar 12, 2024

உசிலம்பட்டி அருகே அருந்ததியினர் சமுதாய மக்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.நடுப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்தியினர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், 7 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர கோரியும் மாவட்ட நிர்வாகத்திடமும், உசிலம்பட்டி வருவாய்த்துறையினரிடமும் பலமுறை மனு அளித்து முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்., தாலுகா அலுவலகத்தை மூட வந்த மக்களை போலீசார் தடுத்தி நிறுத்திய சூழலில், போலீசாரின் தடையை மீறி அலுவலகத்தின் கதவுகளை மூடினர்., தாலுகா அலுவலகத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.