• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நானும் மதுரைக்காரன் தாண்டா- விஷால் பேச்சு

ByA.Tamilselvan

Dec 13, 2022

லத்தி படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால் நானும் மதுரைக்காரன் தாண்ட என்ற வசனம் என்னை சினிமா உலகில் பிரபலபடுத்தியது என பேசினார்.
புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ,திருச்சி நடைபெற்றது. அதே போல மதுரை தங்கரீகல் தியோட்டரில் நடிகர் விஷால் தனது ரசிகர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் மதுரை மக்கள் என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிறார்கள்.மதுரையில் எனக்கு கிடைத்த அன்பு,ஆதரவு என்வாழ்கையில் கிடைத்த வரம்.”நானும் மதுரைக்காரன் தாண்ட” என்ற வசனம் என்னை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது.நடிகர் சங்க கட்டிடம் வளர்வதற்கு மதுரகாரர்கள்தான் காரணம்.தங்க ரீகல் தியோட்டர் எனக்கு மிக ராசியானது.தியோட்டர் உரிமையாளர் எனது குடும்பத்தில் ஒருவர்.லத்தி படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1 ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்பேன்.லத்தி படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் நடிகர் விஷால்.இந்நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.