K.R.S ஜவகர் தயாரித்து S.ஜவஹர்லால் இயக்கத்தில் வெளியான திரைப்படம்
“நான் வேற மாதிரி”
இத்திரைப்படத்தில் ஷா, ஜோதிஷா, G.நஷீர் பாஷா,ஹரிஷ் மூசா, சித்த தர்ஷன்,
டிக் டாக் இலக்கியா, உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தனது அன்பான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகி ஜோதிஷா, சொந்த பந்தம் யாரும் இல்லாமல் நண்பர்களுடன் சுற்றி திரியும் நாயகன் ஷாவும் ஜோதிஷாவும் காதலிக்கின்றனர்.

ஜோதிஷா குடும்பத்தினர் இருவரது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிச்சயதார்த்தம் முடிந்த உடன் நாயகி வீட்டில் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறக்கின்றனர்.
இந்த கொலைக்கான மர்மம் என்ன? கொலையாளி யார்? அதற்கான பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும், சஸ்பென்ஸ், திரில்லர்,காதல் என வேற மாதிரி உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜவஹர்லால் அறிமுக நாயகனாக நடித்திருக்கும் ஷா
நடனம்,சண்டை காட்சிகள்,காதல் காட்சிகள் என்று அனைத்தையும் செய்ய உழைத்துள்ளார்.
நாயகி ஜோதிஷா சிறப்பாக நடித்துள்ளார். காவல்துறை கெட்டப்பில் வரும் நசீர் பாஷா கம்பீரமாகவும், தோரணையாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிக் டாக் இலக்கியா, சித்த தர்ஷன், ஹரிஷ்மூசா தங்களுக்கு கொடுத்த வேலையில் சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜி.ஜெயபாலனின் கேமரா கண்கள் மலைப்பகுதியின் அழகை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது. மா.சிவசங்கரின் இசையில் அனைத்து பாடல்களும் நம்மை ரசிக்கும்படியாக வைத்துள்ளது.
பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் வேற மாதிரி இருக்கு “நான் வேற மாதிரி” திரைப்படம்.
