• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வெள்ளிக்கிழமை உருவாகிறது “ஜாவத்” என்ற புயல்

Byமதி

Dec 1, 2021

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் கடல் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. இந்த புயல் சின்னம் நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய அது, நாளை அது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம் (3-ந்தேதி) இந்த புயல் சின்னம் புயலாக மாற உள்ளது. அப்போது கடல் சீற்றம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலில் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

3-ந்தேதி உருவாகும் புயலுக்கு “ஜாவத்” என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதிஅரேபியா வழங்கிய பெயராகும்.
ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

இந்த புயல் சின்னத்தால் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர் மழையால் தவித்த தமிழக மக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.