கூடலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்து நிர்வாகக்குழு இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளர். கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செறு முள்ளி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் அளித்தும் இதுவரை நடவ் டிக்கை எடுக்கவில்லை.
இதைக்கண்டித்தும், விசாரணை என்ற பெயரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக காலம் கடத்தி வருவதை கண்டித்தும் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகக்குழு இயக்குனர் கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.