இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 311 – ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி தற்போது வரை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி SSTA எனப்படும் இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இச் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜானகிராமன் மாவட்ட செயலாளர் பிரமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் அனோன்ஸி யா பேச்சியம்மாள் கனிமொழி மாவட்ட துணை செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் சையது இப்ராம்ஷா வேலுச்சாமி கண்ணதாசன் சரவணன் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் மாவட்ட பொருளாளர் பிரபு உள்ளிட்டோருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.