• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோவை நல்லாம்பாளையத்தில் பயங்கரம்: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீக்கிரை!

BySeenu

Sep 22, 2026

​ கோவை, நல்லாம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் மெக்கானிக் ஒருவரின் வீட்டின் முன்பாக வழக்கம் போல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வேளையில் அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர், நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்து உள்ளனர்.

​சற்று நேரத்தில் தீயானது வாகனங்கள் முழுவதும் பரவிப் பிடிமானமாக எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த வீட்டின் உரிமையாளரும், அக்கம், பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்கப் போராடினர். எனினும், அதற்கு உள்ளாக வாகனங்கள் பலத்த சேதமடைந்தது.

இருசக்கர வாகனங்களைப் பழுது நீக்குவதற்காக (Bike Repair) சில வாலிபர்கள் உரிமையாளரிடம் கொடுத்திருந்ததாகவும், அந்த வாகனங்களை அவர் பழுது நீக்கித் தராமல் வேறு சிலருக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

​இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்களே ஆத்திரத்தில் நள்ளிரவில் வந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்குத் தீ வைத்துச் சென்றனரா ? என காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.