கோவை மாவட்டத்தில் உள்ள 195 முழுநேர நூலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

பெரியார் அறிவுலகத்தில் எழுந்த ஊழல் சர்ச்சையைத் தொடர்ந்து, நூலகங்களில் உள்ள புத்தகங்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நூலக அலுவலர் நந்தகுமார் தலைமையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வில், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களைச் சேர்ந்த 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. வாசகர்களுக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலேயே போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.