• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்.. இன்று முதல் முன்பதிவு.

Byகாயத்ரி

Sep 23, 2022

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 23ம் தேதியன்று பயணம் செய்ய உள்ளவர்கள் அரசு பேருந்துகளின் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், TNSTC செயலி மூலமாகவும், நேரடி முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.