கடந்த 2022 ஆம் ஆண்டு கேஜிஎஃப்-2, காந்தாரா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மூலம் இந்திய சினிமாவின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பிய நிறுவனம்ஹோம்பாலே பிலிம்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் 2023 புத்தாண்டு தினத்தன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் இந்திய சினிமாவில் 3000ம் கோடி ரூபாய் முதலீடு செய்ய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு இதுதான் :
“ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.

சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது, அது அனைவராலும் பார்க்கப்பட்டு, உய்த்துணர்ந்து பாராட்டப்பட்டது. நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப் பெரிய ஊடகமாக இருந்து வருகிறது.இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.பன்முகத் தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக் கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம்.

இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் 5 ஆண்டுகளில் 3000 கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!”
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கே.ஜி.எஃப்.’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்தையும், தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘ரகு தாத்தா’ என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் ‘டைசன்’ எனும் திரைப்படத்தையும், ‘சார்லி 777’ புகழ் ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி’ எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலைசேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் […]
- ஈரோடு தேர்தல் மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது..!!ஈரோடு இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து […]
- சித்தார்த் படம் தொடக்கவிழாசித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் 5.2.2023 காலை 11மணிக்கு மிக எளிய […]
- “குற்றம் புரிந்தால்”
நீதியை கையில் எடுக்கும் ஹீரோஅமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் “குற்றம் புரிந்தால்”. இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு […] - உடல் எடையை குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாஉடல் எடையை குறைக்க சவாலாக எடுத்து குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுசென்னை தனியார் நட்சத்திர […]
- பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை..!!மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.பிரபல […]
- தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார்… ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நடைமுறையில் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற உத்தரவை […]
- அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் […]
- நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழாநீலகிரி மாவட்டத்தின் பழனி என்று அழைக்கப்படும் அண்ணாமலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் […]
- உதகை எல்க்ஹில் முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா…மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கும் எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் […]
- வெறிச்சோடி உதகை ரோஜா பூங்காவார விடுமுறையான இன்று உதகை ரோஜா பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள்…சுற்றுலா நகரமான உதகைக்கு […]
- விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும்’குஷி’ பட படப்பிடிப்புதெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ […]
- படிப்பு பிரசாதம் மாதிரி அதனை விற்காதீர்கள்- நடிகர் தனுஷ்வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் […]
- தனுஷ் நீ ஜெயிச்சுட்டடா உணர்ச்சிவசப்பட்ட பாரதிராஜாவெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் […]
- வாணிஜெயராம் பாடியபாடல்களில் காலம் கடந்தும் இருக்கப்போகும் பாடல்கள்சனிக்கிழமை காலை(4.02.2023) காலமான பிரபல பின்னணி பாடகிவாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். […]