நாட்டிலேயே முதல் மாநிலமாக இமாசல பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இமாசல பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுடைய 53 லட்சத்து 86 ஆயிரத்து 393- பேரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இமாசல பிரதேசம் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.