
நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின்மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது குமரி மாவட்டத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் சூர்யாவிற்கு கீர்த்தி ஷெட்டி ஜோடியாகியுள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்திற்காக சூர்யா, தொடர்ந்து 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரே கட்டமாக சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெற்றிமாறனின் வாடிவாசல் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
