• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஹெலிகாப்டர் விபத்து; விமானப்படை விளக்கம்!

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு திடீர் மேகமூட்டமே காரணம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

குன்னூரில் கடந்த டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ உயிரிழந்தனா். அந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூரு மருத்துவமனையில் டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு விமானப் படைத் தலைவா் ஏா் சீஃப் மாா்ஷல் வி.ஆா். செளத்ரி விமானப் படைத் தளபதி மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு விசாரணையை நிறைவு செய்து அதுதொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையை தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் முன்னதாக தாக்கல் செய்தது.

விசாரணை அறிக்கையில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட எம்ஐ-17வி5 இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட அந்த விமான விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது நாசவேலையோ காரணம் அல்ல எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இந்திய விமானப்படை எதிர்பாராத திடீர் மேகக்கூட்டத்தில் ஹெலிகாப்டர் சிக்கியதே விபத்திற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளது