• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கடுமையான பனிப்பொழிவால்
உறைநிலையில் நயாகரா நீர்வீழ்ச்சி

கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி உறைந்து போய் காணப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த சிலநாட்களாக பனிப்புயல் வீசுகிறது. இதனால், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு சென்றுள்ள நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. விமானம், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.