• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதகையில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

உதகையில் கடந்த இரண்டு நாட்களாக உறைபனி தாக்கம் காணப்படுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.


ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர் பனி, உறை பனியின் காலநிலை காணப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் மழை காரணமாக இந்த முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் காந்தல், தலைகுந்தா, குதிரை பந்தைய மைதானம், பகுதிகளில் புல்வெளிகளில் உறப பனி படர்ந்துள்ளது .இதில் படகு இல்லம், நீர்நிலைகள். நீரோடைகளில் உறை பனியின் தாக்கத்தால் நீர் நிலைகளின் மேல் மேகம்போல் பனி காணப்படுகிறது.


வரும் நாட்களில் உறைபனியில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாகவும் இதனால் நாள்தோறும் அதிகாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் குளிர் ஆடைகளைப் போர்த்தியும் தீ மூட்டியும் உறைபனியின் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.


மேலும் அதிகாலை வேளை பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உறை பனியின் தாக்கம் அதிகாலை 10 மணிவரை நீடிப்பதால் கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மலை காய்கறிகளும் உறை பனியால் வெகுவாக பாதிப்படையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.