வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. ஈரோடு மாவ்டத்திலுள்ளம் தீடிரென மழை கொட்டியது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜனதாபுரம், செட்டியப்பனுர், புதூர், கிரிசமுத்திரம், வளையாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் குளம் போல் காட்சியளித்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இப்படி தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் நல்ல மழை கொட்டியது.








