• Wed. Mar 26th, 2025

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

ByP.Kavitha Kumar

Feb 27, 2025

கேரளா​வில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளா​வில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், ராமநாத​புரம் உள்ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று (பிப்ரவரி 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்​ஞானி பா.கீதா வெளி​யிட்ட அறிவிப்பில், தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. இதன் தாக்​கத்​தால் தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை, புதுக்​கோட்டை, ராமநாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது. மேலும், இதே மாவட்​டங்​களில் சில இடங்​களில் வரும் மார்ச் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்​ளது என்று அவர் தெரிவித்துள்ளார்