தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 22ம் தேதி வரை கனமழை பெய்யலாம் என ஏற்கனவே வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்து வெளியான லேட்டஸ்ட் செய்திக்குறிப்பில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
