கிழிந்த பணியுடன் துணி மூட்டைகளை சுமந்து பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் அரசு மருத்துவமனை முன்பு அதிர விட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் .மருத்துவமனை நோயாளிகள் கவனிப்பு படியை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் பணிபுரிந்த ஊழியர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 ஆண்டு பணி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கு பணியின் போது வழங்கப்பட வேண்டிய மருத்துவமனை நோயாளி கவனிப்பு படி வழங்கப்படவில்லை, இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் சுகாதாரத்துறை இதைக் கண்டு கொள்ளவில்லை.
மேலும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மருத்துவமனை நோயாளி கவனிப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ஆணையிட்டது.ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக புதுச்சேரி அரசு இதனை செயல்படுத்தவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு எதிரே பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

சங்க பொதுச் செயலாளர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற சுகாதாரத்தை ஊழியர்கள் கையில் தட்டு ஏந்தி சாலையில் செல்லும் பாதசாரிகளிடமும் பொதுமக்களிடமும் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கிழிந்த பனியனுடன் துணி மூட்டைகளை சுமந்து கொண்டு புதுச்சேரி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.