• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குரூப் 2 முதன்மை தேர்வு : சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி தேதி

Byவிஷா

Dec 18, 2024

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுத இருப்பவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை (டிச.18) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் உரிய சான்றிதழ் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு கட்டணம் செலுத்துதல், தமிழ் தகுதி தேர்வுக்கு விலக்கு பெற சான்றிதழ் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வு மையத்தை தேர்வு செய்தல் ஆகியவற்றுக்கும் நாளை தான் கடைசி தினம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நினைவூட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே, இதுவரை சான்றிதழை பதிவேற்றம் செய்யாதவர்கள் நாளைக்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.