• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இவர் ஒரு சாமானியன்.. ஆனால் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்

Byமதி

Dec 12, 2021

ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவது வழக்கம். எப்படியாவது ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை சொல்லிவிட முடியாதா? என்ற ஏக்கத்தோடு இருப்போர் பலர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் சமூக வலை தளங்கள் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆனால் 80களில் பிறந்தவர்கள் என செய்வார்கள். தனது தலைவனின் எப்படியாவது பார்த்து விட முடியாத என பையை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பிவிடுவார்கள். அப்படி பட்ட ஒருவர் தான் இவர்.

இந்த முதியவருக்கு எப்படியும் 70க்கு மேல் இருக்கும்,72 வயது தலைவருக்கு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனுக்கு ஊரில் இருந்து ரயில் பிடித்து ஆட்டோ மாறி வந்து அலைந்து அலைக்கழிக்கப்பட்டும், அவருக்கு தலைவரின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் இதுவரை தலைவரைப் பற்றி சேமித்த செய்திகள் , தினசரி விளம்பரங்கள், பாட்சா கால பாதிப்பின் ஆட்டோ ஓட்டுனர் சீருடை முதுகில் நம்பர் 7 எம்ப்ராய்டரி என எதையும் தலைவர் பார்க்காத விரக்தியில் அவர் ஊடகங்களுக்கு திறந்து காட்டி விட்டு மயங்கியது மனதை உறுத்துகிறது.

இவர் எங்கிருந்து வருகிறார், குடும்பம் எங்கு உள்ளது, மகன் மகள் உள்ளனரா? இவரை காணாத மனைவி என செய்வார் என்று எல்லாம் எத்தனையோ யோசனை இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது நமக்குள் எழாமல் இல்லை.