• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பிறந்தநாள் கொண்டாட தயாரான நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!…

சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சேலம் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.


இன்று மதியம் தமிழக முதல்வர் நேரில் வந்து இறந்த வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ராஜா என்கிற ராஜேந்திரன் 58 வயதாகிறது. அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்தது. இதனால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தைை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வீரபாண்டி ராஜாவின் உடல் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி ராஜா கடந்த 2006-2011 ஆம் ஆண்டு வரை வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.ஏற்கனவே சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இருந்து வந்தார்

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை சேலம் வருகை தர உள்ளார்.