• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும்
தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே வேளையில் இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்த நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் (சுமார் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம்) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் (சுமார் ரூ. 49 ஆயிரம்) உயர்த்தி 5 லட்சம் யென் (சுமார் ரூ.3 லட்சம்) ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் நிதி மந்திரி கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.