கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவாரக்கி வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று (டிச.,30) திடீரென சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது.
இதில், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எப்போதும் வானிலை மையத்திலிருந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களே எதிர்பாராமல் மழை கொட்டித் தீர்த்துள்ளது.வெள்ள நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி இன்றைகுள் சரிசெய்யப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் சென்னைக்கு எதுவும் செய்யாமல் குட்டிச்சுவாரக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை, இதை சரி செய்யனும். அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் இவைகளை சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.