கர்நாடக மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி 501 இடங்களை கைப்பற்றியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தொடக்க முதலே ஆளுநர் பாஜக கட்சியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.1,184 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 501 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 433 இடங்களை பிடித்துள்ள ஆளும் பாஜக கட்சி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த முறை 195 இடங்கள் சுயேச்சை வேட்பாளர்கள் வசம் சென்றுள்ளது. ஆம் ஆத்மீ ஜனதா கட்சிக்கு தலா 1 இடம் கிடைத்துள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் முறையே 2 மற்றும் 6 இடங்கள் கிடைத்துள்ளன.
20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று இருக்கக் கூடிய நிலையில், பாஜக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், மக்கள் பாஜக கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளது.