• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி சுயம்பு யோக ஆஞ்சநேயர் தியான கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

தேனி மாவட்டம் நாகலாபுரம், பாலகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே அமைந்துள்ளது, மதுமதி மூலிகை மற்றும் யோக வைத்திய ஆசிரமம். இந்த வளாகத்தில் தியான யோக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இன்று (ஜன.2) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து 108 வடமாலை சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. நாகலாபுரம் மட்டுமின்றி தேனி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மதுமதி மூலிகை மற்றும் யோக வைத்திய ஆசிரம நிர்வாகி மருத்துவர் ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.