• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா!!

ByA.Tamilselvan

Nov 2, 2022

திருமண அறிவிப்பு வெளியிட்டு வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ள நடிகை ஹன்சிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஹன்சிகாவும், சோகேல் என்பவரும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள்.
அது லாபகரமாக நடந்து வரும் நிலையில் சோகேலை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது . இந்த நிலையில் ஹன்சிகா தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொழிலதிபர் சோகேலை திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு செய்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹன்சிகாவுக்கு திரை உலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.