

தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் பரிசாக வழங்கியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் அக் 21ல்வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் முதல் வாரத்திலேயே 380 ஸ்கிரீன்களில் வெளியான சர்தார் ,2 வாரத்தில் 500 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் படம் ரூ100 கோடி வசூல் வேட்டையை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு toyotafortuner காரை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார்.இந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கார்த்தியும் கலந்து கொண்டார்.
