• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கூட்டுறவு சங்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

Byவிஷா

Dec 20, 2023

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் டிச.24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வரும் நிலையில் இதில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மகளிர் கல்லூரி உள்ளிட்ட ஆறு மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் இணையதளம் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.