• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வெள்ள நிவாரணத்திற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ்…

ByG.Suresh

Dec 19, 2023

வெள்ள நிவாரணத்திற்காக சிவகங்கை ஆட்சியரிடம் மெழுகுவர்த்தி மற்றும் உணவுப்பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் வழங்கினார்.

கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையினால் தென் மாவட்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகி வெள்ளங்களில் தத்தளித்து சொந்த உடைமைகளை இழந்து வீதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வண்ணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தில் சார்பில் 1500 க்கு மேற்பட்ட மெழுகுவர்த்திகளை உற்பத்தி செய்து அவற்றினை தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் இன்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிவாரண பொருட்களை இயற்கை பேரிடர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.